Jul 29, 2026
Thisaigal NewsYouTube
சட்டத்தை பின்பற்றிய செயலாகும்
தற்போதைய செய்திகள்

சட்டத்தை பின்பற்றிய செயலாகும்

Share:

பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவோ தொடர்ந்து பதவி வகிக்க முடியாது என்பதை கிளந்தான் சட்டமன்றம் எடுத்துள்ள முடிவு தெளிவாக பிரதிபலிக்கிறது என்று பெர்சத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்தார்.

பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்ட குவா மூசாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நெங்கிரி சட்டமன்ற உறுப்பினர் முகமது அசிசி அபு நைம் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியாது என்பதற்கு அத்தொகுதி காலியாகி விட்டதாக கிளந்தான் சட்டமன்ற சபா நாயகர் டத்தோ முகமட் அம்மார் நிக் அப்துல்லா அறிவித்து இருப்பது சட்டத்தை பின்பற்றி எடுக்கப்பட்ட முடிவாகும் என்று முகைதீன் யாசின் வர்ணித்துள்ளார்.

கிளந்தான் மாநில அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவைத் தொடர்ந்து பெர்சத்து கட்சியின் உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கப்பட்டுள்ள முகமது அசிசி அபு நைம் நாடாளுமன்ற உறுப்பினாக இருக்கும் குவா மூசாங் தொகுதி உட்பட 6 நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலை பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

இவர்கள் அனைவரும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்த இப்ராஹிமை ஆதரிப்பதாக அறிவித்தவர்கள் ஆவார்.

Related News

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது