ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மருத்துவ அதிகாரிகளின் எதிர்காலம் தொடர்பான முக்கிய அறிவிப்பை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நாளை தாக்கல் செய்யப்படும் 2027 வரவு-செலவுத் திட்டத்தில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் கூறுகையில், ஒப்பந்த முறையை முடிவுக்குக் கொண்டு வருவது, மீண்டும் சுகாதார அமைச்சை பொறுப்பேற்றது முதல் தமது முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என்றார். இந்த விவகாரம் ஏற்கனவே பரிசீலிக்கப்பட்டுள்ள நிலையில், நாளைய அறிவிப்புக்காக சற்று பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதனிடையே, சபா மற்றும் சரவாக்கைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகக் கூறிய டாக்டர் ஸுல்கிஃப்லி, மருத்துவ அதிகாரி பதவிக்கான தகுதிகள் மலேசிய மருத்துவ மன்றத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டவை என்றார்.








