Jul 1, 2026
Thisaigal NewsYouTube
64 மில்லியன் ரிங்கிட் செலவைக் குறைக்கிறது வீடமைப்புத் துறை - அமைச்சர் ங்கா கோர் மிங்
தற்போதைய செய்திகள்

64 மில்லியன் ரிங்கிட் செலவைக் குறைக்கிறது வீடமைப்புத் துறை - அமைச்சர் ங்கா கோர் மிங்

Share:

மக்களின் நலனுக்காக 10 பில்லியன் ரிங்கிட் அரசாங்கச் செலவினங்களை மறுசீரமைப்பு செய்யும் நிதி அமைச்சின் திட்டத்திற்கு, வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது.

உலகளாவிய எரிபொருள் நெருக்கடி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நாட்டின் மானியச் சுமை அதிகரித்துள்ள நிலையில், பொருளாதார நிலைத்தன்மையைக் கருத்தில் கொண்டு தனது அமைச்சில் 64.4 மில்லியன் ரிங்கிட் சேமிப்பைச் செய்யத் தயாராக இருப்பதாக வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் கூறியுள்ளார்.

இதற்காக அவசியமற்ற கூட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் ரத்து செய்யப்படும் அல்லது அவற்றின் அளவு குறைக்கப்படும் என்று அவர் விளக்கினார்.

இருப்பினும், இந்தச் சிக்கன நடவடிக்கைகள் மக்களின் மேம்பாட்டுத் திட்டங்களைப் பாதிக்காது என்றும், வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு தடையின்றித் தொடரும் என்றும் ங்கா கோர் மிங் உறுதி அளித்துள்ளார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை