Apr 3, 2026
Thisaigal NewsYouTube
திரெங்கானு சுல்தானுடன் டத்தோஸ்ரீ ரமணன் சந்திப்பு: பெர்கேசோ மறுவாழ்வு மையத் திட்டம் குறித்து விளக்கம்
தற்போதைய செய்திகள்

திரெங்கானு சுல்தானுடன் டத்தோஸ்ரீ ரமணன் சந்திப்பு: பெர்கேசோ மறுவாழ்வு மையத் திட்டம் குறித்து விளக்கம்

Share:

திரெங்கானு சுல்தான் மிசான் ஜைனல் அபிடின் அவர்களைச் சந்தித்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், மாநிலத்தில் அமைக்கப்பட்டு வரும் பெர்கேசோ மறுவாழ்வு மையத்தின் முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளித்தார்.

இச்சந்திப்பின் போது, விபத்து அல்லது நோயினால் பாதிக்கப்படும் தொழிலாளர்கள், குறிப்பாக திரெங்கானு மக்கள், மீண்டும் குணமடைந்து வேலைக்குத் திரும்புவதை இந்த மையம் உறுதி செய்யும் என்று அமைச்சர் கூறினார்.

இது வெறும் சிகிச்சை மையம் மட்டுமல்லாமல், தொழிலாளர்களின் வேலைத்திறனை மேம்படுத்தும் தளமாகவும் அமையும் என டத்தோஸ்ரீ ரமணன் சுட்டிக்காட்டினார்.

மக்களின் நலனில் சுல்தான் காட்டும் அக்கறைக்கு நன்றி தெரிவித்த டத்தோஸ்ரீ ரமணன், இத்திட்டம் திட்டமிட்டபடி தரமான முறையில் செயல்படுத்தப்படும் என்றும் உறுதி அளித்தார். திரெங்கானுவில் சமூகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் அரசின் ஒரு முக்கிய மைல்கல்லாக இத்திட்டம் பார்க்கப்படுகிறது என்றும் வர்ணித்தார்.

Related News