Sep 27, 2026
Thisaigal NewsYouTube
RM54,000 உபகரண மோசடியில் அரசு ஊழியர் கைது
தற்போதைய செய்திகள்

RM54,000 உபகரண மோசடியில் அரசு ஊழியர் கைது

Share:

போலி ஆவணங்கள் மூலம் சுமார் RM54,000 மதிப்பிலான அறுவை சிகிச்சை உபகரணங்கள் விநியோகத்தில் மோசடி செய்ததாக, பகாங் மாநில எஸ்.பி.ஆர்.எம் ஒரு அரசு ஊழியரைக் கைது செய்துள்ளது.

40 வயது மதிக்கத்தக்க அந்த நபர், ஒரு தனியார் நிறுவன விற்பனை மேலாளருடன் இணைந்து கோலா லிபிஸ் பூர்வகுடி மக்கள் மேம்பாட்டுத் துறைக்கு உபகரணங்கள் வழங்கியதாகப் போலி ஆவணங்களைத் தயாரித்ததாகக் கூறப்படுகிறது.

பகாங், ராவ் நீதிமன்றம் அவருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக்காவல் விதித்துள்ள நிலையில், எஸ்.பி.ஆர்.எம் சட்டம் 2009-இன் கீழ் தொடர்ந்து மேல் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Related News