Jan 7, 2026
Thisaigal NewsYouTube
கொலை வழக்கில் முன்னாள் விரிவுரையாளருக்கு 30 ஆண்டுச் சிறை
தற்போதைய செய்திகள்

கொலை வழக்கில் முன்னாள் விரிவுரையாளருக்கு 30 ஆண்டுச் சிறை

Share:

ஷா ஆலாம், ஜனவரி.06-

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, போலீஸ்காரர் ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக கல்லூரி முன்னாள் விரிவுரையாளர் ஒருவருக்கு 30 ஆண்டுச் சிறையும், 12 பிரம்படித் தண்டனையும் ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் இன்று விதித்தது.

41 வயது சாய் கோங் வீ என்ற அந்த முன்னாள் விரிவுரையாளர், கடந்த 2017 ஆம் ஆண்டு அதிகாலை 3.25 மணியளவில் சுபாங் ஜெயா, பிங்கிரான் யுஎஸ்ஜே போலீஸ் நிலையத்தில் லான்ஸ் காப்பரல் அந்தஸ்தைக் கொண்ட வெலென்டினோ மேசா என்ற போலீஸ்காரரைக் கொன்றதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

அன்று அதிகாலை 3 மணியளவில் கொள்ளைச் சம்பவம் குறித்துப் புகார் அளிக்கச் செல்வது போலக் காவல் நிலையம் சென்ற சாய், அங்குத் தனியாக இருந்த வெலென்டினோ மேசாவைச் சுத்தியலால் தாக்கியுள்ளார். பின்னர் அந்த போலீஸ்காரரின் துப்பாக்கியைப் பறித்து அவரைச் சுட்டுக் கொன்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

Related News