Dec 3, 2025
Thisaigal NewsYouTube
குழந்தையைப் பராமரிக்கும் உரிமை: இறுதி மேல்முறையீட்டில் தோல்வி
தற்போதைய செய்திகள்

குழந்தையைப் பராமரிக்கும் உரிமை: இறுதி மேல்முறையீட்டில் தோல்வி

Share:

புத்ராஜெயா, செப்டம்பர்.03-

தனது நான்கு வயது மகளைப் பராமரிக்கும் உரிமையை தனது முன்னாள் மனைவியிடம் வழங்கியிருக்கும் அப்பீல் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு அனுமதி கோரி ஆடவர் ஒருவர் செய்து கொண்ட விண்ணப்பத்தைக் கூட்டரசு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

38 வயதுடைய R. கண்ணனின் விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்த மூவர் அடங்கிய கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகள் குழுவினருக்குத் தலைமையேற்ற மலாயா தலைமை நீதிபதி ஹஸ்னா ஹாஷிம், கண்ணன் தனது முன்னாள் மனைவி 32 வயது V. தேவித்திராவிற்கு வழக்குச் செலவுத் தொகையாக 50 ஆயிரம் ரிங்கிட் வழங்கும்படி உத்தரவிட்டார்.

இவ்வழக்கில் தேவித்திரா வெற்றி பெற்று இருப்பது குறித்து அவரின் வழக்கறிஞர் R. ரேணுகா உறுதிப்படுத்தினார்.

தனது மகளைப் பராமரிக்கும் உரிமையைத் தேவித்திராவிற்கு கடந்த 2023 ஆம் ஆண்டு வழங்கிய ஷா ஆலாம் உயர் நீதிமன்றம், மாதத்திற்கு இரு முறை, தனது மகளைச் சென்று காண்பதற்கு கண்ணனுக்கு அனுமதி வழங்கியது.

கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி தனது மகளைப் பார்ப்பதற்கு கண்ணன் சென்ற போது, அந்த குழந்தையை தூக்கிக் கொண்டுச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. குடிநுழைவுத்துறை பதிவின்படி, அந்த குழந்தையைத் துபாய்க்குக் கொண்டு சென்று சுமார் 2 ஆண்டு காலம் கண்ணன் தன் வசம் வைத்திருந்ததாக நீதிமன்ற ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News