Aug 6, 2026
Thisaigal NewsYouTube
பத்துமலையில் தேசியப் பொங்கல் விழா
தற்போதைய செய்திகள்

பத்துமலையில் தேசியப் பொங்கல் விழா

Share:

கோலாலம்பூர், ஜன.4-

எதிர்வரும் ஜனவரி 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பத்துமலை தி ருத்தல வளாகத்தில் மாபெரும் தேசியப் பொங்கல் விழா, வெகு சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானமும், மஹிமா எனப்படும் இந்துக் கோவில்கள் இந்து அமைப்புகள் ஒருங்கிணைப்பு பேரவையும் இணைந்து இந்த தேசியப் பொங்கல் விழாவை ஏற்பாடு செய்துள்ளதாக தேஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா தெரிவித்துள்ளார்.

தேசியப் பொங்கல் விழாவுடன் பத்துமலைத்திருத்தலத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்திய கலாச்சார மையத்தின் திறப்பு விழாவும் ஒரு சேர இரட்டை விழாவாக நடைபெறும் என்று டான்ஸ்ரீ நடராஜா குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பாரம்பரியத்தின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் நோக்கில் பல்வேறு அம்சங்களை கொண்டு கட்டப்பட்டு இருக்கும் இந்திய கலாச்சார மையம் காலை 10.30 மணிக்கு திறப்பு விழா காணவிருக்கிறது.

அதேவேளையில் அன்றைய தினம் கொண்டாடப்படும் தேசியப் பொங்கல் விழாவையொட்டி தமிழர்களின் பாரம்பரியத்தையும், அவர்களின் கலை, கலாச்சார செறிவுகளையும் தாங்கிய பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக டான்ஸ்ரீ நடராஜா விவரித்தார்.

இவ்விரு நிகழ்வுகளிலும் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன், தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கலந்து கொள்வர்.

பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக்கொண்டார்.

Related News

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

 பெர்கெசோ டாயா கெர்ஜாயா 2.0 மோசடி: 100-க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்படலாம் / எஸ்.பி.அர்.எம் தகவல்

பெர்கெசோ டாயா கெர்ஜாயா 2.0 மோசடி: 100-க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்படலாம் / எஸ்.பி.அர்.எம் தகவல்

கேட்பரி டெய்ரி மில்க் x லோட்டஸ் பிஸ்காஃப்: புதிய சாக்லேட் கூட்டணியை மலேசியாவில் அறிமுகப்படுத்தியது மொண்டலீஸ்

கேட்பரி டெய்ரி மில்க் x லோட்டஸ் பிஸ்காஃப்: புதிய சாக்லேட் கூட்டணியை மலேசியாவில் அறிமுகப்படுத்தியது மொண்டலீஸ்

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்