Oct 18, 2026
Thisaigal NewsYouTube

பன்றி இறைச்சியை உண்ணும்படி மெய்க்காவலரை கட்டாயப்படுத்துவதா? செனட்டருக்கு எதிராக போலீஸ் விசாரணை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பன்றி இறைச்சியை உண்ணும்படி மெய்க்காவலரை கட்டாயப்படுத்துவதா? செனட்டருக்கு எதிராக போலீஸ் விசாரணை

பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 27-

செனட்டரான மேலவை உறுப்பினர் ஒருவர் தனது மெய்க்காவலரை பன்றி இறைச்சியை உண்ணும்படி கட்டாயப்படுத்தியதாக கூறப்படும் புகார் தொடர்பில் போலீசார், விசாரணை அறிக்கை ஒன்றை திறந்துள்ளனர்.

இது தொடர்பாக அந்த செனட்டரின் மெய்க்காவலர் போலீஸ் புகார் செய்த வேளையில் அதனை வன்மையாக மறுத்து அந்த செனட்டரும் பதிலுக்கு ஒரு போலீஸ் புகாரை செய்துள்ளதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அகமது தெரிவித்தார்.

அந்த செனட்டர் நேற்று இரவு 8.30 மணியளவில் இது தொடர்பாக தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையிலான புகார் ஒன்றை அளித்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தம்முடைய தன்னிலை விளக்கத்தில் அந்த குற்றச்சாட்டை அந்த செனட்டர் மறுத்துள்ளார்.

இதன் தொடர்பில் அந்த செனட்டரை விசாரணை செய்வதற்கு ஏதுவாக துணை பப்ளிக் பிராசிகியூட்டரின் உத்தரவை போலீசார் பெறும் வேளையில் இந்த சம்பவம் குற்றவியல சட்டம் 500 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்படும் என்றார்..

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு  1,000 ரிங்கிட் நிதி  உதவி! எஞ்சியவர்களுக்கான  தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு 1,000 ரிங்கிட் நிதி உதவி! எஞ்சியவர்களுக்கான தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

மியன்மாருக்குச் சட்டவிரோதமாகத் திரும்ப முயன்ற 11 பேர் கைது

மியன்மாருக்குச் சட்டவிரோதமாகத் திரும்ப முயன்ற 11 பேர் கைது

சிறப்பு அனுமதி அட்டை வழங்குவதில் முறைகேடா? கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை விசாரணை

சிறப்பு அனுமதி அட்டை வழங்குவதில் முறைகேடா? கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை விசாரணை

கழுத்தில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதே சுங்கத்துறை பெண் அதிகாரியின் மரணத்துக்குக் காரணம்

கழுத்தில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதே சுங்கத்துறை பெண் அதிகாரியின் மரணத்துக்குக் காரணம்