Dec 3, 2025
Thisaigal NewsYouTube
லஞ்ச ஊழலுக்கு எதிராக தீவிர நடவடிக்கை: 15.5 பில்லியன் ரிங்கிட் திரும்பப் பெறப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

லஞ்ச ஊழலுக்கு எதிராக தீவிர நடவடிக்கை: 15.5 பில்லியன் ரிங்கிட் திரும்பப் பெறப்பட்டுள்ளது

Share:

ஶ்ரீ இஸ்கண்டார், அக்டோபர்.11-

லஞ்ச ஊழலுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டு வரும் தீவிர அமலாக்க நடவடிக்கையினால் 15.5 பில்லியன் ரிங்கிட் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

லஞ்ச வேர்களிலிருந்து நாட்டைச் சுத்தம் செய்வதற்கும், பாதுகாப்பதற்கும் லஞ்ச ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கையை தொடர்வதற்கு அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் தன்மையில் செயல்படுபவர்கள், யாராக இருந்தாலும், எந்தவோர் உயர்ப் பதவிகளில் இருந்தாலும் அவர்களுக்கு எதிராக ஊழல் எதிர்ப்பு சட்டம் பாயும். இதிலிருந்து யாரும் தப்பிக்க இயலாது என்பதைத் தாம் நினைவுறுத்த விரும்புவதாக டத்தோ ஶ்ரீ அன்வார் தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 15.5 பில்லியன் ரிங்கிட்டை அரசாங்கம் வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளது. ஊழலுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டு வரும் கடும் அமலாக்க நடவடிக்கையின் விளைவாகவே இந்த வெற்றி கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.

ஊழலில் திளைத்தவர்கள், எத்தகைய தரப்பினராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக வலை சுருங்கிக் கொண்டு இருக்கிறது என்று பிரதமர் எச்சரித்தார்.

இன்று ஜோகூர், ஶ்ரீ இஸ்கண்டாரில் பெட்ரோனாஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடனான சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

Related News