Jul 31, 2026
Thisaigal NewsYouTube
e-hailing ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

e-hailing ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

Share:

சீன நாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி ஒருவரை மடக்கு நாற்காலியினால் அடித்து, காயம் விளைவித்ததாக e-hailing ஓட்டுநர் ஒருவர், இன்று குவந்தான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

அந்த பல்கலைக்கழக மாணவி காரின் கதவை வேகமாக சாத்தினார் என்பதற்காக ஆத்திரம் அடைந்த ஒரு மாற்றுத் திறனாளியான 32 வயதுடைய முஹமாட் சிடெக் சாலெ என்ற 32 வயதுடைய அந்த கார் ஓட்டுநர், அந்த மாணவியை சரமாரியாக தாக்கியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் 16 ம் தேதி மாலை 6.20 மணியளவில் குவந்தானில் உள்ள ஒரு ஹோட்டலில் வரவேற்பு அறையில் அந்த வாகன ஓட்டுநர் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தனக்கு எதிரான குற்றத்தை மறுத்து, அந்த வாகன ஓட்டுநர் விசாரணை கோரியதால் அவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 15 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

Related News

சமூகப் பணித் துறைக்கான வரலாற்றுப்பூர்வ மசோதா

சமூகப் பணித் துறைக்கான வரலாற்றுப்பூர்வ மசோதா

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு