Jul 29, 2026
Thisaigal NewsYouTube
3 வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில், தொழிற்சாலை பணியாளர் உயிரிழந்தார்.
தற்போதைய செய்திகள்

3 வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில், தொழிற்சாலை பணியாளர் உயிரிழந்தார்.

Share:

பாலிங், ஜூன் 18-

3 வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில் மோட்டார்சைக்கிளோட்டி, சம்பவ இடத்திலேயே உடல்சிதைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

கெடா, பாலிங், ஜாலான் பாரிட் பஞ்சாங்-ங்கிலுள்ள கம்போங் பாகோங்-ங்கில் நேற்று அந்த விபத்து நிகழ்ந்தது.

விபத்தில் உயிரிழந்தவர் தொழிற்சாலை பணியாளரான 29 வயது முஹம்மது ஹபிசுதீன் ஹாஷிம் என அடையாளம் கூறப்பட்டது.

கம்போங் அசாம் ஜாவா-விலிருந்து பாரிட் பஞ்சாங்-ங்கை நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது, அவ்வாடவர் செலுத்திய மோட்டார்சைக்கிள், கட்டுப்பாட்டை இழந்து முன்சென்றுக்கொண்டிருந்த பெரோடுவா பெஸ்ஸா வாகனத்தின் பின்புற பகுதியை மோதியது.

அதில், மோட்டார்சைக்கிளிலிருந்து சாலைக்கு நடுவே அவ்வாடவர் சுழன்று விழுந்த போது, எதிர்திசையிலிருந்து வந்த புரோட்டான் பிரீவ் வாகனமோட்டி அவரை மோதினார்.

தலையில் பலத்த காயங்களுக்கு இலக்கான அவ்வாடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்ட பிறகு, சடலம் உடற்கூறு ஆய்வுக்காக கூலிம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக, பாலிங் மாவட்ட போலிஸ் தலைவர் சூப்பர்ந்தேண்டன் ஷம்சுதீன் மாமத் தெரிவித்தார்.

இதர இரு வாகனமோட்டிகள் காயங்களின்றி உயிர் தப்பிய வேளை, அச்சம்பவம் குறித்து 1987ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதாக ஷம்சுதீன் கூறினார்.

Related News

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

ஜப்பானில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்: விழிப்புடன் இருக்க மலேசியர்களுக்கு தூதரகம் அறிவுரை

ஜப்பானில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்: விழிப்புடன் இருக்க மலேசியர்களுக்கு தூதரகம் அறிவுரை

3 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த 18 மாதக் குழந்தையின் மரணம்: தந்தை மீது கொலை வழக்குப் பதிவு

3 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த 18 மாதக் குழந்தையின் மரணம்: தந்தை மீது கொலை வழக்குப் பதிவு

செத்தியா ஆலாம் சட்டவிரோத குடியேற்றம்: உடனடி நடவடிக்கை எடுக்க சிலாங்கூர் மந்திரி பெசார் உத்தரவு

செத்தியா ஆலாம் சட்டவிரோத குடியேற்றம்: உடனடி நடவடிக்கை எடுக்க சிலாங்கூர் மந்திரி பெசார் உத்தரவு

மலேசியாவிற்குள் இஸ்ரேலியர்கள் நுழைய தடை: எல்லையை வலுப்படுத்துகிறது உள்துறை அமைச்சு

மலேசியாவிற்குள் இஸ்ரேலியர்கள் நுழைய தடை: எல்லையை வலுப்படுத்துகிறது உள்துறை அமைச்சு

செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மித்ரா திட்டத்தின் கீழ் புதிய தளவாடங்கள்: அமைச்சர் ஆய்வு

செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மித்ரா திட்டத்தின் கீழ் புதிய தளவாடங்கள்: அமைச்சர் ஆய்வு