Jul 30, 2026
Thisaigal NewsYouTube
அது / விடுப்பில் செல்வதற்கு ஷாகுல் ஹமிட்டிற்கு உத்தரவிடப்பட்டுள்ள விடுமுறையாகும்
தற்போதைய செய்திகள்

அது / விடுப்பில் செல்வதற்கு ஷாகுல் ஹமிட்டிற்கு உத்தரவிடப்பட்டுள்ள விடுமுறையாகும்

Share:

கோலாலம்பூர், ஜூலை 19-

மனித வள அமைச்சின் மனித வள மேம்பாட்டுக் கழகமான HRD Corp. ப்பில் நிகழ்ந்துள்ளதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் அந்த நிறுவனத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM விசாரணை செய்து வரும் வேளையில் அதன் தலைமை செயல்முறை அதிகாரி, ஷாகுல் ஹமிட்டி தாவூத், / SPRM விசாரணைக்கு வழிவிடும் வகையில் தன்னார்வ விடுப்பில் செல்வதாக அறிவித்துள்ளார்.

ஆனால், அது தன்னார்வ விடுப்பு என்று ஷாகுல் ஹமிட்டி அறிவித்துக்கொண்ட போதிலும் அது உண்மையிலேயே ஒருவர் தனது வழக்கமான பணியிலிருந்து ஒதுங்கி இருப்பதற்கு உத்தவிடப்பட்டுள்ள விடுப்பாகும் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

ஒருவர் தனது பதவியை ராஜிமானா செய்ய வேண்டும் அல்லது தனது சேவையை முடித்துக்கொள்ள வேண்டும். அதற்கு முன்னதாக அவர் இடைக்காலமாக விடுப்பில் செல்வதற்கு உத்தரவிடப்படும். அந்த விடுப்பில்தான் ஷாகுல் ஹமிட்டி சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

ஷாகுல் ஹமிட்டி Garden Leave விடுப்பில் சென்று இருப்பதை மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் உறுதிபடுத்தியுள்ளார்.

ஆடம்பர நிகழ்ச்சிகள் ஒருபுறம், வெளிநாட்டுப்பயணங்கள் மறுபுறம் என்ற நிலையில் ஆபத்து நிறைந்த முதலீடுகள் மற்றும் முறைகேடுகளில் HRD Corp சிக்கியிருப்பதாக PAC எனப்படும் பொதுக் கணக்குக்குழு கடந்த ஜுலை 4 ஆம் தேதி அம்பலப்படுத்தியது.

முதலாளிமார்கள் செலுத்தும் லெவி பணத்தின் மூலம் கோடிக்கணக்கான வெள்ளி பணம் புரளும் ஓர் அமைப்பான HRD. Corp. பில் நிகழ்ந்துள்ளதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் அந்த நிறுவனத்தை SPRM விசாரணை செய்ய வேண்டும் என்ற ஒரு பரிந்துரையையும் PAC முன்வைத்தது.

இதற்கு முக்கிய காரணம். HRD Corp. தலைமை செயல்முறை அதிகாரி என்ற முறையில் ஷாகுல் ஹமிட்டி, அந்த நிறுவனத்தின் இயக்குநர் வாரியத்திலும், முதலீட்டு வாரியத்திலும் ஓர் உறுப்பினராக இருந்துள்ளார்.

இதன் தொடர்பில் SPRM விசாரணை முடியும் வரையில் DRD. Corp. பிற்கு தலையேற்றுள்ள ஷாகுல் ஹமிட்டி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் அல்லது அவர் உடனடியாக அப்பொறுப்பிலிருந்து தூக்கப்பட வேண்டும் என்று கடந்த ஜுலை 9 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பாசிர் குடாங் எம்.பி. ஹசன் அப்துல் கரீம், மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம்- மை கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து HRD Corp. முறைகேட்டில் அமைச்சு யாரையும் தற்காக்காது என்பதையும் அமைச்சர் ஸ்டீவன் சிம் உத்தரவாதம் அளித்துள்ள நிலையில் ஷாகுல் ஹமிட்டி திடீரென்று விடுப்பில் சென்றுள்ளார்.

Related News

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர்  பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர் பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு