Dec 3, 2025
Thisaigal NewsYouTube
வியாழக்கிழமை தேதி முடிவு செய்யப்படும்
தற்போதைய செய்திகள்

வியாழக்கிழமை தேதி முடிவு செய்யப்படும்

Share:

பகாங், பெலாங்காய் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதி குறித்து முடிவு செய்வதற்கு தேர்தல் ஆணையமான எஸ்.பி.ஆர் வரும் வியாழக்கிழமை தனது சிறப்புக்கூட்டத்தை நடத்தவிருக்கிறது.

பெலாங்காய் சட்டமன்றத் தொகுதி காலியாகிவிட்டது குறித்து பகாங் மாநில சட்டமன்ற சபா நாயகர் டத்தோஸ்ரீ முகமட் ஷர்கார் ஷம்சுதீன் னிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை தாங்கள் பெற்றுள்ளதாக எஸ்.பி.ஆர் தலைமைச் செயலாளர் டத்தோ இக்மைருடின் இஷாக் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் வியாழக்கிழமை சிலாங்கூர், சுங்கை பூலோ அருகில் எல்மினாவில் நிகழ்ந்த இலகு ரக விமான விபத்தில் பெலாங்காய் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜோஹாரி ஹாருன் காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

Related News