Oct 5, 2026
Thisaigal NewsYouTube

இஸ்மாயில் சப்ரியுடன் தொடர்புடைய 169 மில்லியன் ரிங்கிட்டைப் பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இஸ்மாயில் சப்ரியுடன் தொடர்புடைய 169 மில்லியன் ரிங்கிட்டைப் பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

கோலாலம்பூர், அக்டோபர்.01-

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் மற்றும் அவரது முன்னாள் அரசியல் செயலாளர் அனுவார் யுனுஸ் ஆகியோருடன் தொடர்புடைய 169 மில்லியன் ரிங்கிட் நிதியை அரசாங்கம் பறிமுதல் செய்ய அமர்வு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இப்பறிமுதல் நடவடிக்கையை எதிர்த்து இஸ்மாயிலோ அல்லது அனுவாரோ நீதிமன்றத்தை அணுகாததால், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் பறிமுதல் கோரிக்கைக்கு அனுமதி அளிப்பதாக நீதிபதி சுஸானா ஹுசேன் அறிவித்துள்ளார்.

கடந்த மாதம் இது குறித்து பொது அறிவிப்பு வெளியிடப்பட்ட போதிலும் கூட, எந்த ஒரு மூன்றாம் தரப்பினரும் அந்நிதியைக் கோர முன்வரவில்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எம்ஏசிசி சட்டம் 2009 பிரிவு 41(1) இன் கீழ் எஸ்பிஆர்எம்மின் பறிமுதல் விண்ணப்பத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →