கோலாலம்பூர், செப்டம்பர்.26-
காஸா மற்றும் பாலஸ்தீனத்துக்கு அமைதி காக்கும் பணிக்குச் செல்ல மலேசிய இராணுவம் எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருப்பதாக மலேசிய இராணுவத் தளபதி ஜெனரல் டான் ஶ்ரீ முகமட் ஹஃபிஸுடின் ஜந்தான் தெரிவித்துள்ளார்.
என்றாலும், அதற்கான முடிவுகளையும், இப்பணியின் பாதுகாப்பு நிலைகள் குறித்தும், அரசாங்கமும், வெளியுறவு அமைச்சும் மட்டுமே முடிவு செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், மலேசிய இராணுவத்திற்கு அமைதி காக்கும் பணியில் நீண்ட கால அணுபவம் உண்டு என்று குறிப்பிட்டுள்ள ஹஃபிஸுடின், கடந்த 1960 முதல் கொங்கோ, சொமாலியா, போஸ்னியா மற்றும் கம்போடியா உள்ளிட்ட நாடுகளில், மலேசிய இராணுவம் அப்பணியை மேற்கொண்டதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.








