Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஜிவா ராக்யாட் அடைமொழிக்கு உயர் கொடுப்பவர் ஜோகூர் சுல்தான்
தற்போதைய செய்திகள்

ஜிவா ராக்யாட் அடைமொழிக்கு உயர் கொடுப்பவர் ஜோகூர் சுல்தான்

Share:

ஜிவா ராக்யாட் அடைமொழிக்கு உயிர் கொடுத்து வரும் மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கன்டார்,தமது அந்தரங்க அதிகாரி டத்தோ சுகுமாரன் ராமனின் திருமண விருந்து நிகழ்​வில் கலந்து சிறப்பு சேர்த்துள்ளார். டத்தோ சுகுமாறன், டத்தின் அனிதா தேவி சுப்பையா என்பவரை தமது வாழ்க்கைத் துணைவியாக கரம் பிடித்துள்ளார்.

புதுமணத் தம்பதியரின் திருமண விருந்து உபசரிப்பு கடந்த சனிக்கிழமை ஜோகூர்பாருவில் உள்ள முன்னணி ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. இவ்விருந்து உசரிப்பில் சுல்தான் இப்ராஹிம், ஜோகூர் அரசியார் ராஜ சாரித் சொஃபியா சுல்தான் இட்ரிஸ் ஷா மற்றும் அரச பேராளர்கள் சில​ர் கலந்து சிறப்பித்தனர்.மணமக்களின் பிரதான மேடைக்கு முன்புறம் முதல் வரிசையில் அமர்ர்ந்திருந்த ஜோகூர் சுல்தானும், அரசியாரும், மணமக்களை வாழ்த்தியதுடன், உடன் நடைபெற்ற விருந்து உபசரிப்பிலும் கலந்து கொண்டனர்.டத்தோ சுகுமாறன், ​ஜோகூர் மாநிலத்தின் யாயாசான் சுல்தானா ரொகாயா அறக்கட்டளையின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.யாயாசான் சுல்தானா ரொகாயாஅறக்கட்டளை என்பது ஜோகூர் மாநில இந்தியர்களுக்கு உதவும் நோக்கில் சுல்தான் இப்ராஹிமின் அறிவுறுத்தலின் பேரில் அமைக்கப்பட்ட ஓர் அறக்கட்டணையாகும். இது கடந்த 2016 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

Related News