Feb 3, 2026
Thisaigal NewsYouTube
ஆத்திரம் மற்றும் பணப் பிரச்னை: வங்கி அதிகாரி கொலைக்குப் பின்னணியாக இருக்கலாம் என போலீஸ் சந்தேகம்
தற்போதைய செய்திகள்

ஆத்திரம் மற்றும் பணப் பிரச்னை: வங்கி அதிகாரி கொலைக்குப் பின்னணியாக இருக்கலாம் என போலீஸ் சந்தேகம்

Share:

அலோர் ஸ்டார், பிப்ரவரி.03-

அலோர் ஸ்டார், ஜாலான் தஞ்சோங் பெண்டாஹாரா, தாமான் சுல்தான் அப்துல் ஹாலிமில் உள்ள ஒரு வீட்டில் தனது உறவினரைக் குத்திக் கொன்ற நபர் பயன்படுத்திய ஆயுதத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

அந்த ஆயுதத்தை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர் சையிட் பஸ்ரி சையிட் அலி தெரிவித்தார். ஆரம்பக் கட்ட விசாரணையின்படி, 29 வயதுடைய அந்தச் சந்தேக நபர், வங்கியின் செயல்பாட்டு நிர்வாகியைக் குத்திக் கொன்றதில் தனியாகச் செயல்பட்டது தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர் விரைவாக ஆத்திரப்படும் குணம் கொண்டவர் என்பது தெரிய வந்துள்ளது. ஆரம்பக் கட்ட விசாரணையில், இந்த கொலைக்கான காரணம் நிதிச் சிக்கல்களுடன் தொடர்புடையது எனத் தெரிகிறது.

இருப்பினும், மேல் விசாரணைகள் இன்னும் நடைபெற்று வருகின்றன. விசாரணைக்கு உதவும் வகையில் சந்தேக நபர் பிப்ரவரி 9-ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று சையிட் பஸ்ரி தெரிவித்தார்.

உயிரழந்த 52 வயதான Zahrullail Basir, அவரது வீட்டில் மூன்று கத்திக் குத்துக் காயங்களுடன் நேற்று சடலமாக மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

சந்தேக நபர் நேற்று இரவு 8.34 மணியளவில் சிலாங்கூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பேருந்து ஒன்றில் கைது செய்யப்பட்டார்.

Related News