May 24, 2026
Thisaigal NewsYouTube
சைபர் பாதுகாப்பு ஊடுருவல், நடந்து இருப்பது உண்மையே
தற்போதைய செய்திகள்

சைபர் பாதுகாப்பு ஊடுருவல், நடந்து இருப்பது உண்மையே

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 26-

ரயில் மற்றும் பேருந்து என பொது போக்குவரத்து சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ள Prasarana Malaysia நிறுவனம், சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதைப் போன்று தனது உள்கட்டமைப்பு முறையில் ஒரு பகுதியில் சைபர் தாக்குதல் நடந்து இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும் இந்த சைபர் தாக்குதலானது, Prasarana-வின் பொது போக்குவரத்து முறையில் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த ஊடுருவல் குறித்து நிபுணர்களை கொண்டு தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த பொது போக்குவரத்து நிறுவனம் குறிப்பிட்டுட்டுள்ளது.

Related News