கங்கார், டிசம்பர்.15-
மிக அபாயகரமாக வாகனத்தைச் செலுத்தி, இளைஞர் ஒருவருக்கு மரணத்தை விளைவித்ததாக போலீஸ்காரர் ஒருவர், கங்கார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
38 வயது முகமட் ஸுல்ஹைய்ரி ஷுனாஸார் அப்துல் ஷுகோர் என்ற அந்த போலீஸ்காரர், மாஜிஸ்திரேட் நூருல் நதாஷா ரிஸால் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
VDU 3307 என்ற பதிவு எண்ணைக் கொண்ட வாகனத்தில் இளைஞர் முகமட் டிர்டாவுஸ் ஐய்மான் ஸாய்னோன் என்பவரை மோதி, அவருக்கு மரணம் விளைவித்ததாக காப்பரல் அந்தஸ்தை கொண்ட அந்த போலீஸ்காரர் குற்றஞ்சாட்டப்பட்டார்.
கடந்த நவம்பர் 25 ஆம் தேதி, இரவு 10.20 மணியளவில் கங்காரில் உள்ள பெர்லிஸ் மாநில சட்டமன்ற கட்டடம் முன்புறம் அந்த போலீஸ்காரர் இந்தக் குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.








