மிட்சுபிஷி பாஜேரோ ரக வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து டிரெய்லர் லோரியுடன் மோதியதில் அந்த வாகனத்தில் பயணம் செய்த இரு முதியவர்கள் மாண்டனர். இச்சம்பவம் இன்று அதிகாலை 5.45 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 365 ஆவது கிலோ மீட்டரில் சிலிம் ரீவர் அருகில் நிகழ்ந்தது.
83 மற்றும் 76 வயதுடைய இரண்டு முதிவர்கள் சம்பவ இடத்திலேயே மாண்டதாக பேரா மாநில தீயணைப்பு மற்றம் மீட்புத்துறை அதிகாரி சபாரொட்சி நோர் அஹ்மாட் தெரிவித்தார்.
இவ்விபத்தில் அதிர்ஷ்டசவசமாக 31 வயதுடைய அந்த டிரெய்லர் லோரி ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பியதாக சாபாரோட்சி குறிப்பிட்டார்.








