Oct 18, 2026
Thisaigal NewsYouTube

மூவருக்கு ஆறு நாள் தடுப்புக்காவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மூவருக்கு ஆறு நாள் தடுப்புக்காவல்

கோலாலம்பூர், செப்டம்பர் 21-

பெட்டாலிங் ஜெயா,பண்டார் ஸ்ரீ தமன்சாரா, பெர்சியரன் மெரண்டி- யில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் அரை நிர்வாணக் கோலத்தில் இறந்து கிடந்த வீட்டு அலங்காரப் பொருட்கள் வடிவமைப்பாளர் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று பேராக அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் நடந்த இந்த கொலை தொடர்பில் 50 க்கும் 61 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷருல்நிஜாம் ஜாபர்தெரிவித்துள்ளார்.

அந்த மூவரும் இன்று பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கு போலீசார், நீதிமன்ற அனுமதியைப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →