கோலாலம்பூர், ஜூலை.31-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் , 16 ஆவது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது இன்று சவால் விடுத்துள்ளார்.
பொதுத் தேர்தல் நடத்தப்படுவது குறித்து பிரதமர் அன்வார் பயப்பட வேண்டிய அவசியமில்லை. காரணம், கடந்த வாரம் கோலாலம்பூரில் நடைபெற்ற துருன் அன்வார் பேரணியில் வெறும் 15 ஆயிரம் பேர் மட்டுமே திரண்டதாக அரசாங்கத் தரப்பு கூறுகிறது.
எனவே அன்வார் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு பயப்படவோ, அச்சப்படவோ அவசியமில்லை. வெறும் இந்த 15 ஆயிரம் பேர், தேர்தல் முடிவை மாற்ற முடியாது. எனவே பொதுத் தேர்தலுக்கு வழி விடும் வகையில் அன்வார் துணிந்து நாடாளுமன்றத்தைக் கலைக்கலாம்.
பொதுத் தேர்தலை நடத்தினால், உண்மையிலேயே யாருக்கு ஆதரவு உள்ளது என்பது அன்வாருக்குத் தெரிந்து விடும் என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.








