கோத்தா கினபாலு, செப்டம்பர்.10-
கடந்த ஜூலை 16-ம் தேதி, அதிகாலை 3 மணியளவில், தான் வழக்கமான பாதுகாப்புப் பணியில் இருந்த போது, மாணவி ஸாரா கைரினா மகாதீரை, கழுத்தில் இரத்தப் போக்குடன் கண்டதாக பாதுகாவலர் லீனா மன்சோடிங் நீதிமன்றத்தில் இன்று சாட்சியம் அளித்துள்ளார்.
மரண விசாரணை நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை, நீதிபதி அமீர் ஷா அமீர் ஹசான் முன்னிலையில் சாட்சியமளித்த அந்த பாதுகாவலர், ரபியாதுல் அடாவியா கட்டடத் தொகுதியில் உள்ள வடிகாலின் அருகே சுயநினைவின்றி கீழே விழுந்த நிலையில் ஸாராவைக் கண்டதாகக் கூறியுள்ளார்.
அதே வேளையில், தான் உடனடியாக ஹாஸ்டலின் தலைமை வார்டன் அஸாரி அப்துல் சகாப்புக்குத் தகவல் தெரிவித்ததாகவும், அதிகாலை 4 மணியளவில், ஸாரா சிகிச்சைக்காக குயின் எலிஸபெத் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.








