கோலாலம்பூர், செப்டம்பர்.19-
கோலாலம்பூரில் நாளை செப்டம்பர் 20-ஆம் தேதி சீன சபை மண்டபத்தில், “இந்தியர்களின் எழுச்சி முதல் போராட்டத்திலிருந்து கொள்கை வரை” என்ற தலைப்பில் தேசிய உரையாடல் ஒன்று நடைபெற உள்ளது.
காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இக்கருத்தரங்கை கெஅடிலான் இந்தியா மலேசியா 2025 செயலகம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் மித்ராவுக்கு எதிரான போர், நிகழ்கால சவால்கள் , இந்தியர்களின் எழுச்சி என மூன்று முக்கிய உரையாடல்கள் இடம் பெறவுள்.
முக்கியத் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் எனப் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.
இந்தியர்களின் எழுச்சி என்பது வெறும் கருத்தரங்கம் மட்டும் அல்ல, அது ஒரு இயக்கம். குறையிலிருந்து செயலுக்கும், போராட்டத்திலிருந்து கொள்கைக்கும் நகரும் மாற்றமே இதன் நோக்கம் என்று இந்நிகழ்ச்சி குறித்து தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.








