கோத்தா கினபாலு, அக்டோபர்.04-
எதிர்வரும் 17-வது சபா மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அம்மாநில சட்டமன்றம் வரும் திங்கட்கிழமை கலைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு மாநில அமைச்சர்கள் ஒருவருக்கொருவர் விடைபெற்றுப் புகைப்படம் எடுத்துக் கொண்ட நிலையில், நேற்று அதற்கான அறிவிப்புகள் வரலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், சபா ஸ்டார் கட்சியும், சபா முற்போக்குக் கட்சியும், ஆளும் கட்சியான கபுங்கான் ரக்யாட் சபாவில் இருந்து விலகியதால், தாமதம் ஏற்படுவதாகவும் நம்பப்படுகின்றது.
இந்நிலையில், அம்மாநில முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர் வரும் திங்கட்கிழமை சட்டமன்றக் கலைப்பை அறிவிப்பார் என்று தகவல்கள் கூறுகின்றன.








