Oct 17, 2026
Thisaigal NewsYouTube

யூசுப் ராவுத்தரின் வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
யூசுப் ராவுத்தரின் வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம்

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் முன்னாள் ஆய்வியல் உதவியாளர் Muhammed Yusoff Rawther- க்கு எதிரான போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு மீதான வழக்கு விசாரணையை கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு இன்று அனுமதி அளித்தது.

Yusoff Rawther சம்பந்தப்பட்ட இநத வழக்கு விசாரணையை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு பிராசிகியூஷன் தரப்பில் துணை பப்ளிக் பிராசிகியூட்டர் Izzat Amir செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு மாஜிஸ்திரேட் எஸ். அருண்ஜோதி அனுமதி அளித்தார்.

இதனிடையே போதைப்பொருளுக்கு அப்பாற்பட்ட நிலையில் தன் வசம் இரண்டு செயற்கை துப்பாக்கியை வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 31 வயது Yusoff Rawther- க்கு எதிரான மற்றொரு வழக்கு விசாரணை மாஜிஸ்திரேட் எஸ். மகேஸ்வரி முன்னிலையில் நடைபெற்றது.

Yusoff Rawther- க்கு எதிரான போதைப்பொருள் வழக்குடன் இந்த துப்பாக்கி வழக்கையையும் சேர்ந்து நடத்துவதா ? இல்லையா? என்பது குறித்து தாங்கள் ஆராய்ந்து வருவதாக பிராசிகியூஷன் தரப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து Yusoff Rawther க்கு எதிரான வழக்கு விசாரணையை மாஜிஸ்திரேட் மகேஸ்வரி வரும் டிசம்பர் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →