Sep 6, 2026
Thisaigal NewsYouTube
டிக் டாக் போலி முதலீட்டுத் திட்டத்தில் 2.5 லட்சம் ரிங்கிட்டை இழந்த பெண்
தற்போதைய செய்திகள்

டிக் டாக் போலி முதலீட்டுத் திட்டத்தில் 2.5 லட்சம் ரிங்கிட்டை இழந்த பெண்

Share:

ஜோகூர் மாநிலம் தங்காக் பகுதியைச் சேர்ந்த 56 வயது பெண் ஒருவர், டிக் டாக்கிக் விளம்பரப்படுத்தப்பட்ட போலி முதலீட்டுத் திட்டத்தில் சிக்கி 2 லட்சத்து 45 ஆயிரத்து 403 ரிங்கிட் பணத்தை இழந்துள்ளார்.

குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறிய மோசடிக் கும்பலிடம் சிக்கி அவர் தமது சேமிப்புத் தொகையை இழந்துள்ளார்.

மோசடி கும்பல் கூறியதை நம்பிய அவர், கடந்த ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 22 -ஆம் தேதி வரை மூன்று வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 18 முறை பணம் அனுப்பியதாக தங்காக் மாவட்ட போலீஸ் தலைவர் ரோஸ்லான் முஹமட் தாலிப் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டம் பிரிவு 420-ன் கீழ் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மோசடியில் சிக்கியவர்கள் உடனடியாக தேசிய மோசடி தடுப்பு நடவடிக்கை மையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து