Sep 15, 2026
Thisaigal NewsYouTube
101 வயதிலும் தேசிய தின விழாவில் கலந்து கொண்ட மகாதீர்
தற்போதைய செய்திகள்

101 வயதிலும் தேசிய தின விழாவில் கலந்து கொண்ட மகாதீர்

Share:

இன்று திங்கட்கிழமை டத்தாரான் புத்ராஜெயாவில் நடைபெற்ற 2026 தேசிய தினக் கொண்டாட்டத்தில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கலந்து கொண்டார்.

101 வயதான மகாதீர், மின்சார சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி விழாவுக்கு வருகை புரிந்து பொதுமக்களைப் பார்த்து கையசைத்து வாழ்த்து தெரிவித்தார்.

அவருடன் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்தக் காட்சிகள் அவரது அதிகாரப்பூர்வ டிக் டாக் கணக்கில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டன.

மேலும், தனது முகநூல் பக்கத்தில் மலேசியாவின் தேசிய தினத்தை முன்னிட்டு குறும் வாழ்த்துச் செய்தியையும் மகாதீர் வெளியிட்டுள்ளார்.

அதில், 1981 முதல் 2003-ஆம் ஆண்டு வரையிலான தமது முதல் பிரதமர் பதவிக் காலமும், 2018 முதல் 2020 -ஆம் ஆண்டு வரையிலான தமது இரண்டாவது பதவிக் கால காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.

மேலும், “மலேசியாவுக்கு இனிய சுதந்திர தினம் மற்றும் 69வது தேசிய தின வாழ்த்துகள்” என்றும் மகாதீர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related News