Oct 17, 2026
Thisaigal NewsYouTube

Papar மருத்துவமனையில் தீ, நோயாளிகள் கூடாரங்களில் தங்க அனுமதி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
Papar மருத்துவமனையில் தீ, நோயாளிகள் கூடாரங்களில் தங்க அனுமதி

பாப்பார், நவ.12-


சபா, பாப்பார் மருத்துமனையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் அந்த மருத்துவமனையில் இருந்த அனைத்து நோயாளிகளும் காப்பாற்றப்பட்டு, தற்காலிகமாக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு 7 மணியளவில் அந்த மருத்துவமனையில் தீ பரவிய அடுத்த சில நிமிடங்களிலேயே அதன் ஊழியர்கள் மற்றும் தாதியர்கள், மிக துரிதமாக செயல்பட்டதில் அனைத்து நோயாளிகளும் மருத்துவமனையிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டனர்.

இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக மருத்துமனை அருகிலேயே தற்காலிகமாக கூடாரங்கள் அமைக்கப்பட்டு, நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே நோயாளிகள் மற்றும் மருத்துவமனைப் பணியாளர்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதாக பாப்பார் நாடாளுமன்ற உறுப்பினரும், உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சருமான அர்மிஸான் முகமட் அலி தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →