Oct 13, 2026
Thisaigal NewsYouTube

இஸ்மாயில் சப்ரியைச் சந்தேகப் பேர்வழி என்று எவ்வாறு வகைப்படுத்த முடியும்?

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இஸ்மாயில் சப்ரியைச் சந்தேகப் பேர்வழி என்று எவ்வாறு வகைப்படுத்த முடியும்?

கோலாலம்பூர், மார்ச்.17-

ஒரு வீட்டில் கட்டுக் கட்டாகப் பணம் எடுக்கப்பட்டது தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரிக்கு எதிரான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை இன்னும் முடிவாத நிலையில் அவரை எவ்வாறு சந்தேக நபர் என்று வகைப்படுத்த முடியும் என்று பாசீர் கூடாங் பிகேஆர் எம்.பி.யும் சட்ட வல்லுநருமான ஹாசான் அப்துல் கரீம் கேள்வி எழுப்பினார்.

ஒரு சமயத்தில் மலேசிய ஊழல் தடுப்பு நடவடிக்கைக் குழுவின் ஓர் உறுப்பினராக மாமன்னரால் தாம் நியமிக்கப்பட்டத்காகவும், அந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில், இஸ்மாயில் சப்ரி விவகாரத்தில் நடப்பது அனைத்து விநோதமாக இருக்கிறது என்று ஹசான் கரீம் குறிப்பிட்டார்.

ஒருவர் விசாரணையில் இருக்கும் பட்சத்தில் அவரை எவ்வாறு சந்தேக நபர் என்று வகைப்படுத்த முடியும்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இஸ்மாயில் சப்ரியை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதற்கு சட்டத்துறை அலுவலகம் எந்தவோர் உத்தவையும் பிறப்பிக்கவில்லை. அவர் இன்னும் கைது செய்யப்படவும் இல்லை. ஆனால், விசாரணை மட்டுமே நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஒரு வீட்டில் கைப்பற்றப்பட்ட கோடிக் கணக்கானப் பணத்தை மட்டும் அவர் சம்பந்தப்பட்ட வழக்கில் அடிக்கடி காட்டப்படுவதற்கான நோக்கம்தான் என்ன என்று ஹசான் கரீம் வினவியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்