கடந்த மாதம் விமானச் சேவையிலிருந்து தற்காலிகமாக மீட்டுக்கொண்ட உள்ளூர் சிக்கன கட்டண விமான நிறுவனமான மைஏர்லைன், தனது நிதி நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில் 15 உத்தேச முதலீட்டாளர்களுடன் தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
இதில் வாடிக்கையாளர்களின் 2 கோடியே 20 லட்சம் வெள்ளி சம்பந்தப்பட்ட டிக்கெட் கட்டணத்தைத் திருப்பி தருவதும் அடங்கும் என்று நேற்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைந்த பட்சம் இரண்டு உத்தேச முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தையில் மைஏர்லைன் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. அதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கான இறுதி விவரங்களைத் தயாரிப்பதற்கு நிறுவனத்தின் குழு ஒன்று இரவு பகலாக உழைத்து வருகிறது. தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்குவது, டிக்கெட் கட்டணத்தை திருப்பி தருவது போன்றவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.








