பாச்சோக், டிசம்பர்.12-
மலேசியர்கள் தங்கள் மைகாட் அட்டை அல்லது பிறப்புப் பத்திரத்தில் தேவையானத் திருத்தங்கள் அல்லது பெயருடன் சேர்த்து பெற்ற விருதுகளை இணைத்துக் கொள்வதற்கு அனுமதிக்கப்படுவர் என்று மலேசிய தேசிய பதிவு துறையான ஜேபிஎன் அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் மலேசியர்கள் தங்கள் அடையாள ஆவணங்களில் இத்தகையத் திருத்தங்களைச் செய்து கொள்வதற்கு அனுமதிக்கப்படுவதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோ பட்ருல் ஹிஷாம் அகியாஸ் தெரிவித்தார்.
தேசியப் பதிவு துறையால் வழங்கப்படும் ஆவணங்கள் நிலையானவை அல்ல என்பதை பலர் உணர்ந்து இருக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
நடப்புத் தேவைகளுக்கு ஏற்ப தங்களின் பெயர்களில் திருத்தங்கள் செய்து கொள்வதற்கும் புதுப்பிக்கப்படுவதற்கும் தற்போது அனுமதிக்கப்படுகின்றனர்.
முன்பு அத்தகைய நிலைமை இருந்ததில்லை. காரணம் கடந்த கால பதிவுகள் முற்றிலும் வித்தியாசமானதாகும். அந்த நேரத்தில் தேசிய பதிவு இலாகாவில் பெயர்களைப் பதிவுச் செய்து கொள்பவர்கள் முழுமையான ஆவணங்கள் வழங்குவதில்லை. இதன் விளைவாக அடையாள ஆவணங்களில் திருத்தங்கள் செய்து கொள்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.
ஆனால் தற்போது ஆவணங்கள் அனைத்தும் முழுவதும் விவரங்களை உள்ளடக்கியிருப்பதால் தேவையான மாற்றங்களைச் செய்து கொள்வதற்கு அனுமதிக்கப்படுவர் என்று டத்தோ பட்ருல் ஹிஷாம் தெரிவித்தார்.








