ஜோகூர் பாரு, செப்டம்பர்.13-
ஜோகூரில் இன்று காலை முதல் கனத்த மழை கொட்டித் தீர்த்த நிலையில், மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் ஜோகூர் நீர் நிலைகளை நேரடியாகப் பார்வையிட்டார். கோத்தா திங்கி நீர் நிலைகளை நோக்கி ஸ்தூலாங் அரசப் படகுத் துறையில் இருந்து தமது சொந்தப் படகில் மாமன்னரே படகைச் செலுத்திய நிலையில், நீர் நிலைகளைப் பார்வையிட்டார்.
மாமன்னரின் இந்த திடீர் வருகையும் நீர் நிலைகளை நேரடியாகப் பாவையிட்டதும் மக்கள் மீது அவர் கொண்டிருந்த அக்கறையைப் புலப்படுத்தியது.








