கோலாலம்பூர், டிசம்பர்.02-
அமைச்சர் பதவியிலிருந்து டத்தோ எவோன் பெனடிக் விலகியது முதல், காலியாக இருந்து வரும் தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கான பணிகளையும், கடமைகளையும், பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனித்து வருவார் என்று அரசாங்க தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ ஷாம்சுல் அஸ்ரி அபு பக்கார் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனைத் தெரிவித்ததாக ஷாம்சுல் அஸ்ரி இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பதவியேற்றது முதல் தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சுக்கு தமது சீரிய பங்களிப்பை வழங்கிய வந்த பெனம்பாங்கான் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ எவோன் பெனடிக்கிற்கு அரசாங்கம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் ஷாம்சுல் அஸ்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.








