Aug 12, 2026
Thisaigal NewsYouTube
ரஃபிஸி ரம்லி பதவி விலகிய போதிலும் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் உதவுவார்
தற்போதைய செய்திகள்

ரஃபிஸி ரம்லி பதவி விலகிய போதிலும் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் உதவுவார்

Share:

கோலாலம்பூர், மே.28-

பிகேஆர் தேர்தலில் துணைத் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்வதில் தோல்விக் கண்டதைத் தொடர்ந்து பொருளாதார அமைச்சர் பதவியிலிருந்து விலகியிருக்கும் ரஃபிஸி ரம்லி, நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தொடர்ந்து தனது பங்களிப்பை வழங்குவார் என்று கட்சியின் துணைத் தலைவர் நூருல் இஸா அன்வார் தெரிவித்துள்ளார்.

ரஃபிஸி ரம்லி எங்கு இருந்தாலும் தன்னுடைய இலக்கிலிருந்து அவர் இந்த பங்களிப்பை வழங்க வேண்டும் என்று நூருல் இஸா குறிப்பிட்டுள்ளார்.

ரஃபிஸி ரம்லி, அரசாங்கத்தில் இருந்தாலும், வெளியே இருந்தாலும் முழு வலிமையுடன் இருப்பார். ரஃபிஸி ரம்லியைப் போன்ற துணிகரத் தலைவர்களின் கருத்துக்கள் நாட்டிற்குத் தேவை. அந்த பண்டான் எம்.பி. தொடர்ந்து தனது பங்களிப்பை வழங்கி வருவார் என்று தாம் நம்புவதாக நூருல் இஸா தெரிவித்தார்.

Related News