ஈப்போ, ஜூலை.15-
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 317 ஆவது கிலோமீட்டரில் தாப்பா அருகில் கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு சீனப் பிரஜைகள் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் நேற்றிரவு 9.35 மணியளவில் நிகழ்ந்தது. இதில் 41 வயதுடைய இரு சீன நாட்டுப் பிரஜைகள் கடுமையானக் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டனர்.
இவ்விருவரும் சீனா, குவாங்டோங் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டதாக தாப்பா மாவட்ட போலீஸ் தலைவர் ஜொஹாரி யஹ்யா தெரிவித்தார்.
அவ்விருவரும் காரில் பயணம் செய்தவர்கள் ஆவர். அந்தக் காரை பினாங்கு, சுங்கை பக்காப்பைச் சேர்ந்த 56 வயது மேற்பார்வையாளர் ஒருவர் செலுத்தியுள்ளார். அவருக்கு கழுத்தில் முறிவு ஏற்பட்டு தாப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஜொஹாரி யஹ்யா கூறினார்.








