மலேசியாவின் மூன்றாவது சிக்கன கட்டண விமான நிறுவனமான மை ஏர்லைன் லைசென்ஸை அரசாங்கம் தற்காலிகமாக ரத்து செய்யவிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இன்று தெரிவித்துள்ளார்.
மலேசிய வான் போக்குவரத்து துறைக்கு புதிய வரவாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உள்ளூர் சேவையை தொடங்கிய சரவா மாநிலத்தை சேர்ந்த பிரபல தொழில் அதிபரால் தொடங்கப்பட்ட மை ஏர்லைன், 11 மாத கால சேவைக்கு பின்னர் பலத்த நிதி நெருக்கடியை எதிர்நோக்கியிருப்பது தொடர்பில் தனது சேவையை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாக கடந்த வாரம் அந்த உள்ளூர் விமான நிறுவனம் அறிவித்தது.
இந்நிலையில் அதன் லைசென்ஸை போக்குவரத்து அமைச்சு தற்காலிகமாக ரத்து செய்யவிருப்பதாக அந்தோணி லோக் குறிப்பிட்டுள்ளார். அந்த விமான நிறுவனம் வான்போக்குவரத்து சேவையை வழங்குவதற்கு இரண்டு விதமான லைசென்ஸை கொண்டு இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.








