பாங்கி, அக்டோபர்.11-
பாங்கி அருகே வட–தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கிலோமீட்டர் 293.4 பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில், பயணிகள் சென்ற எக்ஸ்பிரஸ் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரத்தில் இருந்த சைகை பலகையில் மோதியதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் விபத்து குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் முக்தார் குறிப்பிட்டுள்ளார்.








