பாஸ் கட்சியின் அரசியல் தளமாக கருதப்பட்ட பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் பதிவை சங்கங்களின் பதிவு அலுவலகமான ஆர்ஓஎஸ் ஏன் ரத்து செய்தது என்பது குறித்து இன்று விளக்கம் அளித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி, சங்கங்கள் சட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட அறிவிப்புக்குப் பெரிக்காத்தான் நேஷனல் அளித்த விளக்கத்தைப் பரிசீலித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஆர்ஓஎஸ் தெரிவித்தது.
கடந்த அக்டோபர் 12ஆம் தேதி பெரிக்காத்தான் கூட்டணி சமர்ப்பித்த பதில் மற்றும் விளக்கங்கள், பதிவை ரத்து செய்வதற்கான அடிப்படைக் காரணங்களை மறுக்கப் போதுமானதாக இல்லை என்றும், பதிவைத் தொடர்ந்து வைத்திருப்பதற்கான வலுவான நியாயத்தையும் அவை வழங்கவில்லை என்றும் ஆர்ோஎஸ் குறிப்பிட்டது.
இதன் அடிப்படையில், சங்கங்கள் சட்டத்தின் 13 உட்பிரிவின் கீழ் பதிவை ரத்து செய்ய ஆர்ஓஎஸ் பதிவாளர் முடிவெடுத்துள்ளார்.
பதிவு செய்யப்பட்ட அனைத்து அமைப்புகளும் சங்கங்கள் சட்டத்தையும் தத்தமது அமைப்புகளின் அரசியலமைப்பையும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என ஆர்ஓஎஸ் வலியுறுத்தியுள்ளது.
சட்ட விதிகளுக்கு உட்பட்டு, நியாயமாகவும் வெளிப்படையாகவும் அமைப்புகளின் நிர்வாகத்தை உறுதிப்படுத்தும் வகையில் கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.








