மலாக்கா, ஆகஸ்ட்.09-
தனது அறையிலும், பள்ளிக் கழிப்பறையிலும் 12 வயது மாணவனை மானபங்கப்படுத்தியதாகக் கூறப்படும் பள்ளி தலைமையாசிரியரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜுன் மாதம் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த 58 வயது தலைமையாசிரியர் ஒருவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஸுல்கைரி முக்தார் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மாணவன், இச்சம்பவம் குறித்து தனது தாயாரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர், இது குறித்து போலீசில் புகார் செய்ததாக டத்தோ ஸுல்கைரி முக்தார் குறிப்பிட்டார்.








