கோலாலம்பூர், டிசம்பர்.30-
போலீஸ் போக்குவரத்து சம்மன்களுக்கான 70 விழுக்காடு தள்ளுபடியைப் பெறுவதற்கு இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகையானது இன்றோடு நிறுத்தப்படும் என்றும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நிலுவையில் உள்ள சம்மன்களை விரைவாகத் தீர்த்து வைப்பதற்கான இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் 1 முதல் இன்று டிசம்பர் 30-ஆம் தேதி வரை, வழங்கப்பட்ட இந்த தள்ளுபடியானது, 2026 முதல் அமல்படுத்தப்படவுள்ள புதிய போக்குவரத்து டிக்கெட் கட்டண அமைப்புக்கான இறுதி நடவடிக்கை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், நாடெங்கிலும் நிலுவையிலுள்ள மொத்த சம்மன்களின் மதிப்பு 6.6 பில்லியன் ரிங்கிட் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் அறிவித்துள்ளார்.








