Jul 29, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சரவையில் உள்ளவர்கள் விவேகமற்றவர்களாக உள்ளனர் துன் மகாதீர்  கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

அமைச்சரவையில் உள்ளவர்கள் விவேகமற்றவர்களாக உள்ளனர் துன் மகாதீர் கூறுகிறார்

Share:

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்களில், பெரும்பாலானோர் நல்லதோர் அரசியல்வாதிகள்.

ஆனால், அரசாங்க நிர்வாகத்தில் போதிய அனுபவங்களைக் கொண்டிருக்காததால், அவர்களால் ஆக்கப்பூர்வமான முறையில் ஒருங்கிணைந்து செயல்பட முடியவில்லை என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கருத்துரைத்துள்ளார்.

தம்மை எதிர்க்கும் தரப்பினரை எதிர்ப்பதிலேயே குறியாக உள்ள அன்வார், அவரது அரசியல் பிழைப்பில்தான் அதிகம் கவனம் செலுத்துகிறார். இதுவரையில் தலைமைத்துவ பண்பை அவர் வெளிப்படுத்தவில்லை.

நடப்பு அரசாங்கத்தின் நடவடிக்கைகளும், வர்த்தகங்களுக்கு நட்புறவானதாக இல்லை. அதன் காரணமாகவே, அந்நிய முதலீடுகளைக் கவரவும் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் முடியவில்லை.

தமது தலைமைத்துவத்தின் கீழ், பொது மற்றும் தனியார் துறைகள் இடையிலான ஒத்துழைப்பை ஊக்கவிக்க, 1981ஆம் ஆண்டில் மலேசிய நிறுவன கொள்கை கொண்டுவரப்பட்டது.

தற்போது, அக்கொள்கை புறந்தள்ளப்பட்டுள்ளதோடு, டீசல் உதவித்தொகை மறுசீரமைப்பு, வரி உயர்வு உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் அவசரகதியில் முன்னெடுக்கின்றது.

அதன் காரணமாக, மக்கள் வர்த்தகங்களில் ஈடுபடுவது சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதோடு, பொருள் விநியோக சங்கிலியும் பாதிக்கப்பட்டுள்ளதாக, மகாதீர் கூறினார்.

Related News

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

அமைச்சரவையில் உள்ளவர்கள் விவேகமற்றவர்களாக உள்ளனர் துன் மக... | Thisaigal News