Sep 27, 2026
Thisaigal NewsYouTube
பொதுமக்களின் பணம் இனி பாதுகாப்பாக இருக்கும்! தொண்டு நிறுவனங்களுக்குப் புதிய கிடுக்கிப்பிடி
தற்போதைய செய்திகள்

பொதுமக்களின் பணம் இனி பாதுகாப்பாக இருக்கும்! தொண்டு நிறுவனங்களுக்குப் புதிய கிடுக்கிப்பிடி

Share:

பொதுமக்களிடம் நிதி திரட்டும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு கடுமையான விதிகள் மற்றும் சுயேட்சை தணிக்கை முறையை அமல்படுத்துவது குறித்துச் சங்கப் பதிவிலாகாவான ROS பரிசீலித்து வருகிறது.

NGO எனப்படும் தொண்டு நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் பொதுமக்களிடம் வசூலிக்கும் பணம் சரியான முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

புதிய விதிகளின்படி, குறிப்பிட்ட தொகைக்கு மேல் நிதி திரட்டும் அமைப்புகள், தங்களின் கணக்கு வழக்குகளை சுயேட்சை தணிக்கையாளர்களைக் கொண்டு ஆய்வு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

நிர்வாக வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும், மக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்கவும் இத்தகைய சீர்திருத்தங்கள் அவசியம் எனச் சங்கப் பதிவிலாகா தெரிவித்துள்ளது. விதிகளை மீறும் அமைப்புகளின் உரிமத்தை ரத்து செய்யவும் அதிகாரம் வழங்கப்படவுள்ளது என்பதையும் ROS சுட்டிக்காட்டியுள்ளது.

Related News