Jul 29, 2026
Thisaigal NewsYouTube
அருள்மிகு ஸ்ரீ மகாமாரியம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளல்
தற்போதைய செய்திகள்

அருள்மிகு ஸ்ரீ மகாமாரியம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளல்

Share:

பினாங்கு, ஜன.3-
வருகிற தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பினாங்கு நாட்டுக் கோட்டை செட்டியார்கள் நடத்திய 11 தினங்கள் அபிஷேக பிரார்த்தனை, 11 ஆம் நாள் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

127 ஆம் ஆண்டின் நிகழ்ச்சியாக நேற்று ஜனவரி 2 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 7.00 மணிக்கு பினாங்கு ஸ்திரீட்டில் உள்ள கோயில் வீட்டிலிருந்து அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பட்டு, டத்தோ கிராமட் ரோடு நகரத்தார் சிவன் கோயில் வந்து சேர்ந்தது.

பூஜை, தரிசனம் கொடுத்து பின்னர் மீண்டும் நகர் ஊர்வலமாக பினாங்கு ஸ்திரீட்டில் உள்ள ஸ்ரீ மகாமாரியம்ன் கோயில் வீடு வந்து சேர்ந்தது.

பக்த பெருமக்கள் திரளாக கலந்து கொண்டு வெள்ளி குதிரை வாகனத்தில் ஸ்ரீ மகாமாரியம்மன் அலங்கார பவனி வருவதைக் கண்டு பேரானந்தம் பெற்றனர்.

இந்நிகழ்வில் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் கோயில் அறங்காவலர்களுடன் , பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் இரா. லிங்கேஸ்வரன் உட்பட அறப்பணி வாரியத்தின் இதர ஆணையர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்