Apr 3, 2026
Thisaigal NewsYouTube
அம்பாங் எல்ஆர்டி சேவை மீண்டும் சீரானது: மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பயணிகள் அவதி
தற்போதைய செய்திகள்

அம்பாங் எல்ஆர்டி சேவை மீண்டும் சீரானது: மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பயணிகள் அவதி

Share:

இன்று காலை 11.38 மணியளவில் அவான் பெசார் மற்றும் ஸ்ரீ பெட்டாலிங் நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட மின் தடையால் பாதிக்கப்பட்ட அம்பாங்/ஸ்ரீ பெட்டாலிங் எல்ஆர்டி சேவை, மாலை 5.52 மணி முதல் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

தற்போது ரயில்களின் வருகை இடைவெளி படிப்படியாகச் சீர் செய்யப்பட்டு வருவதாக ரேபிட் ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பயணிகளின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் நிலையங்களில் துணை போலீசாரும் அதிகாரிகளும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சேவை முழுமையாகச் சீரடையச் சற்று கூடுதல் நேரமெடுக்கலாம் என்பதால் பயணிகள் பொறுமை காக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related News