கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூருடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ள கெடா, அரிய மண் தோண்டல் சட்டவிரோத நடவடிக்கை தொடர்பிலான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில் சில புதிய அறிகுறிகள் தென்பட்டுள்ளன என்று அந்த ஆணையத்தின் தலைவர் தான் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.ஆர்.எம் மின் விசாரணையின் போது திருடப்பட்டதாக கூறப்படும் அரிய மண்ணின் மொத்த அளவை கண்டு பிடித்தல், அது தொடர்பான ஆய்வு ஆகிவற்றை மேற்கொள்வதற்கு நிபுணத்துவ சேவையை பயன்படுத்திய போது மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்து இருப்பதாக அஸாம் பாக்கி குறிப்பிட்டுள்ளார்.








