பாலிக் பூலாவ், நவம்பர்.24-
பினாங்கு, பாலிக் பூலாவ் பகுதியில் கேபல் திருட்டில் ஈடுபட்டதாக நம்பப்படும் 3 பேரை, அம்மாநில போலீசார் கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று பிடித்துள்ளனர்.
பெரோடுவா பேஸா ரகக் காரில் வந்த 3 பேர், சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்து கொள்வதாக, நேற்று பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு கிடைத்த தகவலையடுத்து, போலீசார் அங்கு விரைந்தனர்.
போலீசாரைக் கண்டதும் அக்கும்பல் தங்களது காரில் ஏறி அங்கிருந்து தப்பியுள்ளனர்.
இந்நிலையில், அவர்களை 50 கிலோமீட்டர் துரத்திச் சென்ற போலீசார், தென் செபராங் பிறை அருகே மடக்கிப் பிடித்தனர்.
என்றாலும், காரிலிருந்த நான்காவது நபர், அங்கிருந்து தப்பியோடிவிட்டதாகவும், அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பினாங்கு போலீசார் தெரிவித்துள்ளனர்.








