நாட்டில் போதுமான கோழி விநியோகம் இருப்பதையும், அதன் விலை நியாயமாக நிர்ணயிக்கப்படுவதையும் உறுதி செய்ய நாடு தழுவிய நிலையில் சோதனை நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்று உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவீனத்துறை இடைக்கால அமைச்சர் அர்மிசான் முஹமாட் அலி தெரிவித்துள்ளார்.
கோழி மற்றும் முட்டை போன்றவற்றுக்கு அரசாங்கம் வழங்கி வந்த உதவித் தொகை கடந்த புதன்கிழமை நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு அத்தியாவசியப்பொருட்களின் விலையும் கண்மூடித்தனமாக உயர்த்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்று அமைச்சர் அர்மிசான் முஹமாட் அலி குறிப்பிட்டார்.








