மலாக்கா, ஆகஸ்ட்.11-
தனது முன்னாள் காதலியிடம் கொள்ளையிட்டதாக செம்பனைக் குலைகளை ஏற்றும் தொழிலாளர் ஒருவர் மலாக்கா, செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
22 வயது ஆர். தனபாலன் என்ற அந்த தொழிலாளி, நீதிபதி ரொஹாதுல் அக்மார் அப்துல்லா முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் பிந்து கெர்பாங் ஆயர் குரோ நுழைவாயில் ஓய்வுத் தளத்தில் தனது முன்னாள் காதலியான 27 வயது பவானி என்பவரை வேண்டுமென்றே அடித்துக் காயப்படுத்தியதுடன் அவரின் உடமைகளைக் கொள்ளையிட்டதாக தனபாலன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 394 ஆவது பிரிவின் கீழ் தனபாலன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








